தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ…? – டிடிவி

தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது டிடிவி தினகரன் ட்வீட். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி வருகிறது.  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர்  பதிவில்,தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களால் தமிழ்நாட்டின் அமைதியான சூழல் பறிபோய்விடுமோ என்ற பயமும் பதற்றமும் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே குற்றச் செயல்களும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையும் உருவாவதைக் கடந்த காலங்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அமைதியைச் சீர்குலைக்க நினைக்கும் எந்தவொரு சக்தியையும் அனுமதிக்காமல் காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment