ஆளுநருடன் தலைமைச் செயலர் சந்திப்பு மே 1,2 தேதிகளில் முழு ஊரடங்கு அமலாகுமா ?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார்.தமிழகத்தில் அதிகரித்து வரும் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசினார்.அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிகரித்து வரும் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.

மேலும் ,வாக்கு எண்ணிக்கையின் போது எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும்  சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையால்,வருகிற மே 1,2 தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தலாம் என்ற உய்ரநீதிமன்றம் கூறிய பரிந்துரை  பற்றியும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இந்த சந்திப்பின்போது, டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பின்போது ஆளுநர் தலைமைச் செயலாளரிடம் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் இருப்பு வைத்திருக்கு வேண்டும்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.ஆர்டிபிசிஆர் சோதனை மாற்றும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வரமாக கொரோனா உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.மேலும் 98 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,826 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk