இலங்கை அடித்து வெற்றி பெறுமா ..? டிரா செய்யுமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் 2 நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

இந்தியா முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது:

டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாளில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார். அவரைத் தவிர எந்த இந்திய வீரரும் அரைசதம் அடிக்க முடியவில்லை. இலங்கை தரப்பில் லசித் அம்புல்தெனிய, பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தனஞ்சய டி சில்வா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இதையடுத்து, முதல் நாள் மீதமிருந்த நேரத்தில் இலங்கை அணி தனது இன்னிங்சிஸை தொடங்கியது. இருப்பினும் நேற்றை 2-ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பும்ராவைத் தவிர, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி ஆகியோர் 2விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பும்ரா 10 ஓவர்களில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் நாள் ஆட்டத்தில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியாவில் முதன்முறையாக ஒரு டெஸ்ட் இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 8-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நேற்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சிஸை தொடங்கியது.  2-வது  இன்னிங்சில் இந்திய அணி 68.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயம் செய்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் ஷ்ரேயாஸ் ஐயர் (67), ரிஷப் பண்ட் (50) , ரோஹித் 46 ரன்கள் எடுத்ததன் மூலம் இலங்கைக்கு 447 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.

447 ரன்கள் இலங்கைக்கு இலக்கு: 

447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் நேற்று 2-வது இன்னிங்ஸில்  களமிறங்கிய இலங்கை அணி நேற்றைய 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் (16*), திமுத் கருணாரத்னா (10*) ஆகியோர் களத்தில்  உள்ளனர். இந்திய தரப்பில் பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்திஉள்ளார். இந்நிலையில், இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.

இலங்கை வெற்றி பெற ஒரே வழி 3 நாள்களில் மீதமுள்ள 419 ரன்கள் எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மீதமுள்ள 3 நாள்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டையும் இழக்காமல் கடைசிநாள் வரை விளையாடி வந்தால் போட்டி டிராவில் முடியும். 3 நாள்களுக்குள் இந்திய அணி இலங்கை அணியின் அனைத்து விக்கெட்டையும் இலக்கு அடைவதற்குள் பறித்தால் இந்திய அணி வெற்றி பெறும்.

author avatar
murugan