3 வகையான கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் உள்ளது – அமெரிக்க அதிபர்

அமெரிக்காவில் 3 வகையான கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது.ஓன்று ஜனநாயக கட்சி,மற்றொன்று குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.மேலும் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்விகமாக  கொண்டவர் ஆவார்.

இதனிடையே தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அப்பொழுது மக்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவில் 3 வகையான கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையில் உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று பேசியுள்ளார்.