துரைசாமி பதவி பறிப்பா? ஜூனில் மதிமுக முடிவு செய்யும்!

துரைசாமி கடிதம் சர்ச்சையானதை அடுத்து, துரை வைகோ கருத்து.

மதிமுக அவைத்தலைவர் பதிவில் இருந்து துரைசாமியை மாற்றுவது குறித்து ஜூன் மாதம் நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தெரிவித்ததாக கூறப்படுகிறது. துரைசாமி எழுப்பிய கேள்விகள் குறித்து பொதுச்செயலாளர் வைகோ பதிலளிப்பார், நடவடிக்கை குறித்து யோசிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

மதிமுகவை திமுகவுடன் இணைப்பது தொடர்பாக திருப்பூர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம் எழுதியிருந்தது சர்ச்சையானதை அடுத்து, துரை வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார். மதிமுக சட்டமன்ற அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதிருந்தார்.

அதில், மதிமுக கட்சியை திமுகவுடன் இணைத்து விடுங்கள். மதிமுக கட்சிக்கு முன்னர் இருந்த பெயர் தற்போது மாறிவிட்டது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இது தற்போது மதிமுகவில் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு, மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ பதில் அளித்திருந்தார்.

கட்சியில் குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும், துரைசாமியின் கடிதத்தை புறக்கணிக்குமாறும் கூறியிருந்தார். இந்த தற்போது, மதிமுக அவைத்தலைவர் பதிவில் இருந்து துரைசாமியை மாற்றுவது குறித்து ஜூன் மாதம் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என துரை வைகோ கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்