34.4 C
Chennai
Friday, June 2, 2023

அவசரச் சட்டத்திற்கு ஆதரவு… அரவிந்த் கெஜ்ரிவால் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்திப்பு.!

டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக...

கோகுல் ராஜ் கொலை வழக்கில் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாயார்.!

கோகுல் ராஜ் கொலை வழக்கின் ஐகோர்ட் தீர்ப்புக்கு கண்ணீர்...

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…வெயில் கொளுத்தும்…வானிலை மையம் அலர்ட்.!!

புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு என்றும், வெப்ப நிலை இயல்பிலிருந்து...

இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று தோன்றுகிறது..! நடிகர் ரஜினிகாந்த் பேச்சு..!

இந்த கூட்டத்தை பார்க்கும்போது அரசியல் பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த விழாவின் முழு ஏற்பாடுகளையும் NTR மகனும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா மேற்கொண்டார்.

SuperstarRajinikanth Arrived AndhraPradesh
SuperstarRajinikanth Arrived AndhraPradesh [Image Source : Twitter ]

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் TDP தலைவர் நாரா சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க விஜயவாடா சென்ற நடிகர் ரஜினிகாந்தை, என்.டி.ஆர்-ன் மகனும் நடிகருமான பாலய்யா மற்றும் பாலகிருஷ்ணா பூங்கோத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

Rajinikanth Arrived AndhraPradesh
Rajinikanth Arrived AndhraPradesh [Image Source : Twitter ]

பின்பு அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தெலுங்கில் பேசினார். அவர் பேசுகையில், இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது எனக்கு அரசியல் பேச வேண்டும் என்று மனதில் தோன்றுகிறது. ஆனால், அரசியல் பேச வேண்டாம் என்று எனது அனுபவம் சொல்கிறது என்று கூறினார்.

Rajinikanth in NTR100
Rajinikanth in NTR100 [Image Source : Twitter/@Cult4NBK]

மேலும், சந்திரபாபு எனக்கு 30 வருடம் நண்பர், அவர் இந்திய அரசியல் மட்டுமன்றி உலக அரசியலிலும் அனுபவம் மிக்கவர். அவர் 1996 ஆம் ஆண்டு விஷன் 2020 என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு பெரும் புரட்சியை கொண்டு வந்தார். இதை அடுத்து அவருடைய ஆட்சியில் ஹைதராபாத் மாநகரமாக மாறியது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.