இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விற்பனை – ஈபிஎஸ் கண்டனம்

இளைஞர்களை சீரழிக்கும் வகையில், தானியங்கி மூலம் மதுபான விறபனையை துவக்கி உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருத்து 

சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செயும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏ.டி.எம். இயந்திரம் போல் செயல்பட்டு மது மற்றும் பீர் வகைகளை விநியோகம் செய்ய பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்க்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில்,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

கொலைக்களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துளளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.