தோல்வியிலிருந்து மீளுமா பெங்களூரு ? ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியாக பெங்களூரு அணியும், ஹைதராபாத் அணியும் மோத உள்ளது.

ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் 30-வது போட்டியாக இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெங்களூர் அணி பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த போட்டியை வென்றால் மட்டுமே இந்த தொடரில் மேற்கொண்டு பெங்களூரு அணியால் நீடிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் ஹைதராபாத் அணி இதுவரை 3 வெற்றிகளை பதிவு செய்ததோடு புள்ளி பட்டியலிலும் ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது.

நேருக்கு நேர் :

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் தலா 23 போட்டிகளில் விளையாடி உள்ளது அதில் 10 போட்டிகள் பெங்களூர் அணியும் 12 போட்டிகள் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது மேலும் ஒரு போட்டி முடிவில்லாமல் இருக்கிறது. இதன் மூலம் இந்த போட்டியை ஹைதராபாத் அணி வெற்றி பெறும் என்று ரசிகர்களால் கருதப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் :

பெங்களூரு அணி வீரர்கள் :

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், ரீஸ் டாப்லி, விஜய்குமார் வைஷாக், முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.

ஹைதராபாத் அணி வீரர்கள் :

டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஐடன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்

 

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.