போலி இ-பாஸ் பயன்படுத்தி பயணித்தால் கிரிமினல் வழக்கு.! எச்சரித்த கூடுதல் காவல் ஆணையர்.!

போலி இ-பாஸ் பயன்படுத்தி பயணிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும். – சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல்  ஆணையர் கண்ணன் எச்சரிக்கை.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு இம்மாத இறுதி வரையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டம் விட்டு மாவட்டம்  செல்ல இ-பாஸ் கட்டாயம் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் காவல்  ஆணையர் கண்ணன், ஆட்டோ ஓட்டுனர்கள், கால்டாக்சி ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த கூட்டத்திற்கு பிறகு அவர் பேசுகையில், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கூறினார்.

மேலும், போலி இ-பாஸ்  பயன்படுத்தி பயணிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதியப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஊரடங்கை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை முதல் திருப்பி தரப்படும் எனவும் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.