ஜெயலலிதா இருந்த போது நீட்டை தமிழகத்திற்குள் நுழைய விடவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, திட்ட விளக்க பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை ஜிகேஎம் காலனியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திட்டப்பணிகளை தொடங்கி வாய்த்த பின், உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த வரை நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடவில்லை. அவருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தங்கள் பதவிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை நுழைய விட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.