பள்ளிகள் திறப்பது எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பள்ளிகள் திறப்பது எப்போது ? என்று  அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மே 3-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.இது ககுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும்.தமிழக அரசைப் பொறுத்த வரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.