யாருக்கு என்ன திட்டம் ? இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். தற்போது 3- ஆம் கட்ட ஊரடங்கு நாடு முழுவதும் அமலில் உள்ளது.இதனிடையே பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார்.இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.மேலும் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தார்.இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.அதன்படி , நிர்மலா சீதாராமன் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  

அந்த வகையில் நேற்று விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.இந்நிலையில் இன்றும் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.இன்றைய சந்திப்பில் எந்த துறைகளுக்கு திட்டங்களை அறிவிப்பார் என்ற அதிகம் உள்ளது.