அதிமுக – பாஜக கூட்டணி!!பாஜக-அதிமுக இடையே தீர்மானம் என்ன?

  • அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
  • அதிமுக-பாஜக மெகா கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
  • 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று  பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தெரிவித்தார் .

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சு அதிகரித்து வருகிறது.அதேபோல் பாமகவும் கூட்டணி என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியும் சென்றனர்.அங்கு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

பின்னர்  மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவு அளித்தது.

இதன் பின்னர்  பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயலுடன், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

இதன் பின்னர்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், அதிமுக-பாஜக மெகா கூட்டணி அமைத்து தமிழகம், புதுச்சேரியில் தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .

அதேபோல் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் கூறுகையில்,  21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம் என்று  தெரிவித்தார் .

 

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

47 mins ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

6 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

6 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

6 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

6 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

7 hours ago