2 நாட்கள் பயணமாக துபாய் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், 2 நாட்கள் பயணமாக நேற்று இரவு துபாய்  சென்றார். உலக காலநிலை நடவடிக்கை குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர துபாய் சென்றுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்த நிலையில், நேற்று இரவு துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாடு இன்று தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதிர்ச்சி..! சிலிண்டர் விலை உயர்வு..!

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘சிஓபி28 உச்சி மாநாட்டில் பங்கேற்க துபாய் வந்தேன். ஒரு சிறந்த கிரகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.

துபாய்க்கு புறப்படுவதற்கு முன், வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை சமாளிக்க போதிய காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் ஆதரவளிக்க மோடி அழைப்பு விடுத்த நிலையில், காலநிலை நடவடிக்கை துறையில் இந்தியாவின் முக்கிய பங்காளியான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமையின் கீழ் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு நடைபெறுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார்.

 இந்த நிலையில், பிரதமர் மோடி, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு உள்ளிட்ட உச்சிமாநாட்டில் பங்கேற்கும் சில தலைவர்களுடன் மோடி இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.