அதிர்ச்சி..! சிலிண்டர் விலை உயர்வு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாவது வழக்கம்.

அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 19 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.

5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

அதன்படி, சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்து, ரூ.1968-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விலை அதிகரித்து  ரூ.1968-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையானது அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.