‘அந்த இளம் விக்கெட் கீப்பரால் தான் ஜெயிச்சோம்’ – வெற்றிக்கு பின் ருதுராஜ் பேசியது இதுதான் ..!

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியில் சென்னை அணி மும்பை அணியை வீழ்த்திய பிறகு சென்னை அணியின் கேப்டன் ஆன ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியின் காரணங்களை பற்றி பேசி இருந்தார்.

நடந்து கொண்டிருக்கின்ற ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் நேற்றைய 29-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதனால் பேட்டிங் களமிறங்கியது சென்னை அணி, முதலில் தடுமாறிய சென்னை அதன் பின் துபே, ருதுராஜ் கூட்டணியில் சென்னை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மேலும், கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் பறக்க விட்டு அணியின் ஸ்கோரை 200 தாண்ட வைத்தார் ‘தல’ தோனி.

இறுதியில் 20 ஓவருக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து. இதனால், 207 என்ற இமாலய இலக்கை எடுக்க களமிறங்கியது மும்பை அணி. தொடக்கத்தில் அதிரடி காட்டிய ரோஹித், இஷான் பவர்ப்ளே பிறகு பத்திரனாவின் அதிரடி தாக்குதலில் மும்பை அணி ரன்ஸ் எடுக்க திணறியது. ஒரு பக்கம் ரோஹித் சர்மா மட்டும் நின்று சதம் விளாசி போராடி கொண்டிருந்தார். ஆனாலும், அது மும்பை அணிக்கு கை கொடுக்காமல் போனது. இறுதியில், 20 ஓவருக்கு 6 விக்கெட் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டி முடிவடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ஆன ருதுராஜ் வெற்றி பெற்றதன் காரணம் குறித்து பேசி இருந்தார். அவர் பேசுகையில், “எங்கள் பேட்டிங்கின் போது கடைசி அந்த மூன்று சிக்ஸர்களை அடித்து இளம் விக்கெட் கீப்பர் எங்களுக்கு இந்த போட்டியில் வெற்றி பெற ஒரு காரணமாக அமைந்துள்ளார். அது தான் இந்த போட்டியில் பெரிய வித்தியாசமாக அமைந்தது. இது போன்ற மைதானத்திற்கு எங்களுக்கு அந்த 10-15 கூடுதல் ரன்கள் தேவைப்பட்டது. நடு ஓவர்களில் பும்ரா மிக சிறப்பாக பந்து வீசினார். பேட்டிங்கில் அவர்கள் சில சிறந்த ஷாட்களை அடித்த போதிலும், நாங்கள் பந்தின் மூலம் எங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியதாக உணர்கிறேன்.

இந்த மைதானத்தில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும், எங்கள் மலிங்கா (அதாவது பத்திரனா) இன்று நன்றாக பந்து வீசினார்,அவர் சிறந்த யார்க்கர்களை வீசினர். அதே போல் இறுதி கட்டத்தில் துஷார், ஷர்துல் ஆகியோரும் சிறப்பாகச் பந்து வீசினார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. நான் இப்பொது எல்லா மைதானத்திலும் பேட்டிங் நன்றாக செய்கிறேன் என்று நினைக்கிறன் மேலும் அணியின் கேப்டனாக இது ஒரு கூடுதல் பொறுப்பாக உள்ளது”, என்று வெற்றியின் காரணம் குறித்து ருதுராஜ் பேசி இருந்தார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.