கொரோனா காலகட்டத்திலும் குறையாத ஜாதி வெறியைக்கண்டிக்கிறோம் – மக்கள் நீதி மையம்!

கொரோனாவால் 144 தடை உத்தரவை அரசு பிறப்பித்துள்ள இந்த காலகட்டத்திலும் தலித் இன மக்களுக்கு எதிராக நடக்கக்கூடிய நீதிக்கேடுகளை கண்டித்து மக்கள் நீதி மையம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது ஒரு புறம் இருந்தாலும் தலித் இன மக்களுக்கு எதிரான கொடுமைகளும் இந்த பேரிடர் காலத்தில் நடந்து வருகிறது என மக்கள் நீதி மையம் சார்பாக அக்கட்சியின் ஆதி திராவிட நல மாநில செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் இந்த 144 போடப்பட்டுள்ள காலகட்டத்திலும், தலித் இன மக்களுக்கு எதிராக கொலைகள்- 14, மலக்குழி மரணம்- 4, பாலியல் வன்புணர்வு – 5, சாதி ஆணவப்படுகொலைகள்- 2, சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல்- 5, தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை- 3, கல்வி நிலையங்களில்சாதியப் பாகுபாடு- 1, மயானம், மயானப்பாதை பிரச்சினை- 2, அரசுப் பணியாளர்களின் பாரபட்சம்-3,கொத்தடிமை- 1, தாக்குதல்கள்- 41 ஆகியவை நடைபெற்றுள்ளது.

தெரிந்தே இத்தனை மரணங்கள் மற்றும் கொடுமைகள் என்றால் தெரியாமல் எவ்வளவு இருக்கும். எனவே மக்கள் நீதி மையம் இந்தச்சாதி வெறியினை வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அரசு நிர்வாகமும் ஜாதி ஆதிக்கப்போக்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை சட்டரீதியாக எடுத்திட வேண்டும் எனவும் மக்கள் நீதிமயம் வலியுறுத்துவதாக பூவை ஜெகதீஷ்குமார் கூறியுள்ளார்.

author avatar
Rebekal