312 ரன்களை வெற்றிக்கான இலக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி!

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இந்த அணியின் தொடக்க வீரர் பர்ஸ்ஷோ, தாகிர் பந்தில் டக் அவுட்டாக அணி சற்று தடுமாறியது. பிறகு ராய் அரைசதமும் ஜோ ரூட் அரைசதம் அடித்து, அணியை நிலைப்படுத்தினர். கேப்டன் மோர்கன் தனது பங்கிற்கு 57 ரன்கள் எடுத்திருந்தார். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களை அடித்திருந்தார். ஜோஸ் பட்லர் 18 ரன்களும், ஒக்ஸ் 13 ரன்களும் அடித்திருந்தனர்.

இதன்படி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் அந்த அணி தற்போது [பேட்டிங் செய்ய உள்ளது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment