மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை.! சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது.!

சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம்  மத்திய, மாநில அரசை எச்சரித்துள்ளது.

தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதி எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அப்போது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் எந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் செயல்படுகிறீர்கள்.

பலர் படுக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறைகளுக்கு சமூக ஊடகங்களில் உதவி கோருகின்றனர். இருப்பினும், அத்தகைய மக்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. படுக்கை, ஆக்ஸிஜன்,  உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதால் பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்கின்றனர்.

இருப்பினும், வதந்திகளை பரப்புகின்றனர் என அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் தங்கள் குறைகளை எழுப்புகிறார்கள் என்றால், அது வதந்திகள் பரப்புகின்றனர் என்று சொல்ல முடியாது.

வதந்திகளை பரப்புவது என்ற பெயரில் எந்த மாநிலமும் நடவடிக்கை எடுக்க கூடாது என மத்திய, மாநில அரசை எச்சரித்தது. சமீபத்தில் தந்தைக்காக ஆக்சிஜன் கேட்டு ட்வீட் செய்தவரை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan