இந்த நடிகையுடன் காபி குடிக்க ஆசையா? அப்ப இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க!

நடிகை ரெஜினா கசண்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சிவா மனசுல சுருதி  என்ற திரைப்படத்திற்காக தென்னிந்திய சர்வதேச விருதுகளில், சிறந்த பெண் அறிமுக நடிகை என்ற விருதினை பெற்றார்.

இந்நிலையில், நடிகை ரெஜினா நடிப்பில் ‘எவரு’ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் விளம்பரத்திற்காக, இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?” என்று கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

மேலும், இவரது இந்த கேள்விக்கு சரியான பதிலை அளிப்பவர்கள் தன்னுடன் இணைந்து காபி குடிக்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.