“நெருப்புடா.. ரிஷப் பண்ட்டை நெருங்குடா பார்ப்போம்!”- முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் புகழாரம்!

ரிஷப் பண்ட் களமிறங்கினால்  அவருக்குள் இருக்கும்  வெற்றி நெருப்பை எதிரணியின் கேப்டன் உணருவார் என இந்திய அணியின் முன்னால் பேட்ஸ்மேன்  வி.வி.எஸ்.லக்ஷ்மன் கூறியுள்ளார்.

23 வயதான ரிஷப் பண்ட், இந்திய கிரிக்கெட்  அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர்-19 கிரிக்கெட் வேர்ல்டு கப் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய அணியில் இடம் பெற்றார். 2017-ல் T20-யிலும், 2018-ல் ஒன்டே இன்டர்நேஷனல்போட்டிகளிலும், தற்பொழுது IPL தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் கூறியதாவது, ” ரிஷப் பண்ட் சில மேட்ச்களில் சரியாக விளையாடாத காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவரை எடை போட வேண்டாம். அவர் கண்டிப்பாக உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்து விளங்குவார். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சில இக்கட்டான சூழ்நிலைகளில் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்றதை நாம் அறிந்தோம்.

மேலும் பேசிய அவர்,ஒரு இடது கை பேட்ஸ்மேன் என்ற முறையில் அவர் விளையாட வருகையில் அவருக்குள் இருக்கும் நெருப்பை எதிரணியின்  கேப்டனால் உணர முடியும். ஒன்று அல்லது இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடியதை வைத்து அவரைப்பற்றி தீர்மானிக்க வேண்டாம். ஒரு முறை பாதுகாப்பும், ஆதரவும் இருப்பதை உணர்ந்தால் தானாகவே எல்லா மேட்ச்களிலும் வெற்றி பெறுவார். அவர் லிமிடெட் ஓவர்களில் இறங்கி பினிஷிங் செய்யும் திறமை உள்ளவர். இந்திய அணி மேட்ச்களின் இறுதியில் ஹார்டிக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரையே முற்றிலுமாக  நம்பியுள்ளது. அந்த வரிசையில் ரிஷப் பன்ட்டை சேர்த்தால் மேட்ச்களின் இறுதியில் கண்டிப்பாக அதிசயத்தைக் காணலாம். ” என்று ரிஷப் பன்ட் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  நிகழ்ச்சியில் புகழ்ந்து கூறியுள்ளார்.