பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழப்பு!

பிரேசிலில் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட தன்னார்வலர் உயிரிழப்பு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், ஒவ்வொரு நாட்டு அரசும் இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வைரஸை தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த வைரஸை தடுக்க அதிகார பூர்வமாக எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், பிரேசிலில், கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்து பரிசோதனையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது இறப்புக்கான சரியான காரணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.