தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் பணி – ஹால் டிக்கெட் வெளியீடு!

வேலைவாய்ப்பு துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையின் கீழ் தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்ட பணிக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு துறையில் காலியாக உள்ள ITI Principal & Assistant Director of Training ணியிடங்களுக்கான எழுத்துத்‌ தேர்வானது வரும் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த காலியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்