ஶ்ரீ ரவிஷங்கர் குருஜி-யின் "நாக நதி" புனரமைப்பு முயற்சிக்கு விவேக் நன்றி தெறிவித்துள்ளார்..!

தமிழ் சினிமாவில் ‘சின்னக்கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற காமெடி நடிகர் ஆவார். நடிகர் விவேக் காமெடியில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர் ஆவார்.
காமெடி நடிகர் விவேக் தனது டிவிட்டரில் “இன்று வாழும் கலை நிறுவனர் ஶ்ரீ ரவிஷங்கர் குருஜி அவர்களை சந்தித்து , வேலூர் மாவட்ட “நாக நதி”புனரமைப்பு முயற்சிக்காக நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன்” என ட்விட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இவர் ஶ்ரீ ரவிஷங்கர் குருஜி அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
https://twitter.com/Actor_Vivek/status/1183594544161411074?s=19

author avatar
Vidhusan