அமெரிக்காவின் தூதரக உறவை துண்டித்து கொண்டது வெனிசுலா…!!

உள்நாட்டில் குழப்பத்தை அமெரிக்கா ஏற்படுகின்றது என்று  கூறி அமெரிக்காவுடன் தூதரக உறவை வெனிசுலா துண்டித்திருப்பது சர்வதேச உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக நிக்கோலஸ் மதுரோ அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். இதனிடையே தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனவே  மதுரோவின் வெற்றி செல்லாது என எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ மற்றும் சில நாடுகள் தெரிவித்து வந்தன.

மேலும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டதால்  அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெனிசுலாவில் குழப்பம் விளைவிப்பது அமெரிக்கா தான் என்று கூறி அமெரிக்கா_உடனான தூதரக உறவை வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ முறித்துக் கொண்டுள்ளார். இது உலக அரங்கில் ஆச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment