இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் – ஜோ பைடன் விருப்பம்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி காட்சி மூலமாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்பொழுது, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது மற்றும் ரஷ்யா – உக்ரைன் விவகாரம் குறித்து பேசிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தைக்கு பின்பதாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுவடையும் வேண்டும் எனவும், உக்ரைனுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பியதற்காக இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்பட்டது – சீனா அமைச்சர்!

கடந்த ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட சம்பவங்களால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு கடுமையாக பாதிக்கப்பட்டதாக சீனா அமைச்சர் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அவர்களுடன் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தொலைபேசி மூலம் 75 நிமிடங்கள் வரை பேசியுள்ளார். இவர்களின் பேச்சு வார்த்தைக்குப் பின்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாங்காங் சோ ஏரி பகுதியில் இரு தரப்புப் படைகளும் முழுமையாக வாபஸ் பெறப்பட்ட பின்பு, இந்தியா … Read more

இந்தியா மற்றும் டென்மார்க் உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடி சீனா மீது கடும் தாக்கு…

இந்தியா மற்றும் டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டின் போது சீனாவை தாக்கும் வகையில் கடுமையாக கருத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். எந்த ஒரு பொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக சாடினார். இந்தியாவில் வளர்ந்து வரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் நாடு மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்து வருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டு … Read more

அமெரிக்காவின் தூதரக உறவை துண்டித்து கொண்டது வெனிசுலா…!!

உள்நாட்டில் குழப்பத்தை அமெரிக்கா ஏற்படுகின்றது என்று  கூறி அமெரிக்காவுடன் தூதரக உறவை வெனிசுலா துண்டித்திருப்பது சர்வதேச உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக நிக்கோலஸ் மதுரோ அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். இதனிடையே தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனவே  மதுரோவின் வெற்றி செல்லாது என எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ மற்றும் சில நாடுகள் தெரிவித்து வந்தன. மேலும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டதால்  அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. … Read more