3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க வேண்டும்.! வேலூர் மாவட்டம் அதிரடி.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

By manikandan | Published: Apr 08, 2020 06:18 PM

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தற்போதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738-ஆக உள்ளது.

இதனால், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் தங்கள் மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில், தற்போது புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 வேலூர் மாவட்டத்தில் இனி 3 நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறந்திருக்க அனுமதி. ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கலாம் எனவும், 

பால் கடைகள் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் திறக்க அனுமதி. மருந்தகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) வழக்கம் போல திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் வெளியிடங்களில் கூடுவதை தவிர்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.  

Step2: Place in ads Display sections

unicc