வேலுமணி வழக்கு – தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

எஸ்பி வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்ற.  டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி வேலுமணியின் மனுவை உயர்நீதிமன்ற அமர்வு விசாரிப்பதற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எந்த வழக்கையும் விசாரிக்க அதிகாரம் உண்டு என வேலுமணி தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதத்தை முன்வைத்தார். மத்திய அரசு வழக்கறிஞர் தனியார் வழக்குகளை தனிப்பட்ட முறையில் நடத்தக்கூடாதா? என்றும் கேள்வி எழுப்பினார். இதனைத்தொடர்ந்து, வேலுமணியின் மனுவை உயர்நீதிமன்ற அமர்வு விசாரிக்கலாம் என உத்தரவிட்டு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment