வேலூர் தேர்தல் ரத்து – வைகோ கண்டனம்

மக்களவை தேர்தல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி வாக்குச்சாவடியில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாக்களித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, மத்திய, மாநில அரசுகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், வேலூர் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்றும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment