வல்லூர் தேசிய அனல் மின்நிலையத்துக்கு தடை…நீதிமன்றம் உத்தரவு….!!

வல்லூர் தேசிய அனல் மின்நிலை நிர்வாகம் எண்ணூரில் உள்ள சதுப்பு நிலத்தில் நிலக்கரி சாம்பலை கொட்டி வருவதாக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எண்ணூர் சதுப்பு நிலங்களில் நிலக்கரி சாம்பலை கொட்ட தடை விதித்து , வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி கடந்த மார்ச்சுடன் முடிவடைந்ததால் தொடர்ந்து ஆலை தொடர்ந்து செயல்படவும் தடை விதித்தது. இதனால் வல்லூர் அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.