இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இவர்தான் பிரதமர்..! வைகோ அறிவிப்பு.!

I.N.D.I.A Alliance : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என வைகோ அறிவித்துள்ளார்.

ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைக்கப்பட்டு தமிழகத்தில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உட்பட தேசிய அளவிலில் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. NDA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதே போல, காங்கிரஸ்,, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் , விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி (I.N.D.I.A) என்ற பெயரில் மக்களவை தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி இந்தியா கூட்டணியின் பொதுவான முகமாக காண்பிக்கப்பட்டாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இப்படியான சூழலில், மதிமுக தலைவர் இன்று இந்தியா கூட்டணி பாஜக வேட்ப்பாளர் ராகுல் காந்தி என் அறிவித்துள்ளார். இன்று மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் வைகோ வெளியிட்டார். அதில், 74 தலைப்புகளின் கீழ் பல்வேறு வாக்குறுதிகள் அதில் குறிப்பிடபட்டு உள்ளது.

அப்போது பேசிய, வைகோ, இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை மதிமுக வழிமொழிகிறது என தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் திருச்சி தொகுதியில் திமுக தலைமையில் மதிமுக போட்டியிடுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.