தலைவன் இருக்கிறான் படத்திற்கு முன்னரே தமிழ் சினிமாவில் களமிறங்க உள்ள வைகைப்புயல்!

  • வைகைப்புயல் வடிவேலு மீண்டும் தமிழ் சினிமாவில் கமல் நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் படம் மூலம் களமிறங்க உள்ளார். 
  • இப்படத்திற்கு முன்னரே பார்த்திபன் உடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

வைகைபுயல் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னனி காமெடியனாக வலம் வந்தார். இவர் சில வருடங்களாக படங்களில் நடிக்க வில்லை என்றாலும், தற்போதும் இவருக்கான இடம் காத்துக்கொண்டிருக்கிறது. இவர் கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க உள்ளார்.

இப்பட ஷூட்டிங் இந்தியன் 2 திரைப்படதிற்கு பிறகுதான் தொடங்கும் என்பதால், அதற்கிடையில் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு திட்டமிட்டுள்ளாராம்.

அண்மையில் ஒத்த செருப்பு படம் மூலம் பிரபலமான பார்த்திபன், முழு நீள காமெடி படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளாராம். அதில் வடிவேலு நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம் விரைவில் பார்த்திபன் – வடிவேலு கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.