வந்தே பாரத் எக்ஸ்பிரஸை துவங்கி வைத்தார் பிரதமர் மோடி.! அதிவேக ரயிலில் உற்சாக பயணம்.!

இன்று காலை மும்பை காந்தி நகர் ரயில் நிலையத்தில் இருந்து, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காந்தி நகர் – மும்பை இடையேயான பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலின் கட்டமைப்பை பார்த்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, காந்தி நகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, விமானத்தில் பயணம் செய்பவர்கள் ஒருமுறை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்தால் நிச்சயம் திரும்ப திரும்ப பயணிப்பார்கள். விமானத்தை விட 100 மடங்கு குறைவாகவே வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சத்தம் எழுப்பப்படுகிறது.  இதுபோல், ஏற்கனவே இரண்டு ரயில்கள்  டில்லி முதல் வாரணாசி வரையிலும்,  டில்லி முதல் வைஷ்ணோ தேவி வரையிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் அக்டோபர் 1 முதல் மும்பை சென்ட்ரலில் காலை 6:10 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு காந்திநகர் தலைநகரை சென்றடையும்.  மும்பையில் இருந்து அகமதாபாத்தை அடைய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5.25 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment