உத்தரபிரதேசத்தில் 7 மாவட்டங்களில் 18-45 வயதினருக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்பொழுது தடுப்பூசிகள் போடப்படும் பணிகள் நாடு முழுவதும் துவங்கி உள்ளது. குறிப்பாக மே ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கொண்டிருக்கிறது. தடுப்பூசி தட்டுப்பாடுகள் அதிகம் காணப்படும் நிலையில், ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா வழக்குகள் செயலில் உள்ள ஏழு மாவட்டங்களில் மட்டும் இன்று 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது. அதாவது லக்னோ, கான்பூர், அலகாபாத், வாரணாசி, கோரக்பூர், மீரட் மற்றும் பரேலி ஆகிய இடங்களில் தான் தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது. இதுவரை மாநிலத்தில் 1.23 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி  வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

author avatar
Rebekal