தமிழ் சினிமாவில் அடுத்தவர் சாதனையை முறியடிக்காமல் மற்ற நடிகர்கள் தொட முடியாத வசூல் சாதனைகளை படைத்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது படங்கள் உலக அளவில் அந்தளவிற்கு வியாபாரம் ஆகும். வசூலையும் குவித்து வரும்.
அந்த வகையில், தற்போது அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து இடங்களையும் பிடித்த தமிழ் படங்களின் வரிசையில் அனைத்துமே ரஜினி படங்கள்தான்.
அவற்றில் முதலிடத்தில் இருப்பது, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.O, 2ஆம் இடத்தில் கபாலி, மூன்றாவது எந்திரன், நான்காவது கபாலி ஐந்தாவதாக தற்போது லிஸ்டில் இணைந்திருப்பது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பேட்ட.
பேட்ட படம் நன்றாக இருப்பதால், இந்த பாக்ஸ் ஆபிஸ் இடங்களின் வரிசையில் கண்டிப்பாக மாற்றம் வரும் எனக்கூறப்படுகிறது.
DINASUVADU