இத்தாலியை முந்தியது அமெரிக்கா.! உலகளவில் இதுதான் முதலிடம்.!

உலகளவில் இத்தாலியில் தான் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா அதை முந்தி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முதலிடம் வந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றது. இதனால் பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரசால் உலகளவில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 17,81,383 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,08,880 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட 4,04,581 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், உலகளவில் இத்தாலியில் தான் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருந்து வந்தது. தற்போது அமெரிக்கா அதை முந்தி பாதிப்பிலும், உயிரிழப்பிலும் முதலிடம் வந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,580 ஆகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 533,115 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களும் கொரோனா உயிரிழப்பை பதிவு செய்து உள்ளன. கொரோனா வைரஸிலிருந்து உயிரிழப்பை அறிவிக்காத ஒரே மாநிலம் வயோமிங் என்று கூறப்படுகிறது. தனிநபர்களின் இறப்புகள் இத்தாலியை விட குறைவாகவே அமெரிக்காவில் இருந்தன. ஆனால் கடந்த 2 நாட்களில் இத்தாலியை விட அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19468 ஆக உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்