UPWvsMI : நாட் ஸ்கிவர்-பிரண்ட் அசத்தல்..! மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்கள் குவிப்பு..!

யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 182 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் தொடரின் எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் யுபி வாரியர்ஸ் பெண்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

UPWvsMI 12

மும்பை இந்தியன்ஸ் அணியில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். அதிகபட்சமாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் 72 ரன்களும், மெலி கெர் 29 ரன்களும், ஹேலி மேத்யூஸ் 26 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 21 ரன்களும் குவித்துள்ளனர். யுபி வாரியர்ஸ் அணியில் எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். யுபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment