UPWvsMI : இஸ்ஸி வோங் ஹாட்ரிக்..! 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடி வெற்றி..!

மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வென்றது.

மகளிர் ஐபிஎல் தொடரின் தொடரின் எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் யுபி வாரியர்ஸ் பெண்கள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.

MumbaiIndians

183 ரன்கள் என்ற இலக்குடன் யுபி வாரியர்ஸ் அணியில் அலிசா ஹீலி மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். அலிசா ஹீலி, ஸ்வேதா செஹ்ராவத் ஆட்டமிழந்த நிலையில் கிரண் நவ்கிரே அணியை முன்னோக்கி நகர்த்தினார். ராஜேஸ்வரி கயக்வாட் மற்றும் பார்ஷவி சோப்ரா இறுதிவரை களத்தில் நின்றனர்.  இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் யுபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

MumbaiIndians (1)

17.4 ஓவர்களில் 110 ரன்களை அடித்த யுபி வாரியர்ஸ் அணியை, 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. யுபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக கிரண் நவ்கிரே 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இஸ்ஸி வோங் 4 விக்கெட்டுகளையும், சைகா இஷாக் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கனையாக நாட் ஸ்கிவர்-பிரண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment