29.4 C
Chennai
Monday, June 14, 2021

தலைவி திரைப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தலைவி .ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் .

விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் . படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்திற்கான டிரைலர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது ஆம், இந்த படத்திற்கான  டிரைலர் வருகின்ற 23 ஆம் தேதி கங்கனா ரணாவத் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Related news