6 ஆண்டுகளில் 90,00,000 பேருடைய வேலை காலி! அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் போயுள்ளதாக ஒரு தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்=அசிம் பிரேம்ஜி பல்கலை கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், 2004 – 05 காலகட்டத்தில் சுமார் 45.9 கோடி பேர் வேலை பெற்றுள்ளனர். அந்த எண்ணிக்கை அடுத்த 6 ஆண்டுகளில் 2011 – 12 ஆண்டுகளில் 47.7 கோடியாக உயர்ந்தது
ஆனால், அடுத்த 6 ஆண்டான 2017 -18 ஆண்டுகளில் வேலை பெற்றவர்கள் எண்ணிக்கை 46.5 கோடியாக உள்ளத. இது சென்ற 6 ஆண்டை விட 90 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் இருந்த்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வேளாண் துறையிலும், உற்பத்தி துறையிலும் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்க்கு முக்கிய காரணம் ஆகும். உற்பத்தி துறையில் ஏற்படும் வீழ்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.