தேர்தல் விதிகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சியில்  உதயநிதி ஸ்டாலின் செய்த பிரச்சாரம் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும்விதமாக இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக  வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.

ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Image result for உதயநிதி பிரச்சாரம் \

இந்நிலையில் திமுக சார்பாக அதன் முக்கிய தலைவர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தங்களது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில்  உதயநிதி ஸ்டாலின் செய்த பிரச்சாரம் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும்விதமாக இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் மீது தேர்தல் நடந்தை விதியை மீறி பிரச்சாரம் செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment