பல் வலிகிறதா அதை எவ்வாறு சரி செய்வது எளிய வீட்டு மருத்துவம் !!!!!!

பொதுவாக இதை சித்தர்கள் தந்த நோய்  என்று அழைக்கின்றனர்.பல்லில் பலவகையான நோய்கள் தோன்றுகிறது .அதாவது பல்பயோரியா  ,பற்சிதைவு,பல் சொத்தை,பல் ஆட்டம்,பல்புழு,பல் கறை  முதலிய நோய்கள் ஏற்படுகிறது .பல்வலி  பெரும் வலி இன்றைய  காலகட்டத்தில் இந்த நோயால்  பலர் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். தினமும் காலை ,இரவு ஆகிய இருமுறை தினமும்  பல் துலக்க வேண்டும் .

காரணங்கள் :

பற்களில் நோய் தோன்றுவதற்கு முக்கிய காரணம் ஓழுங்காக  பல் துலக்காமை ஆகும்.இரவு நேரங்களில் உணவு உண்ட பிறகு பற்களை நன்கு துலக்கி விட்டு தூங்க வேண்டும்.பற்களை துலக்காமல் தூங்குவதால் காவிட்டிஸ் ஏற்படும்.மேலும் பல் இடுக்குகளில் உணவு துணுக்குகள் சேர்வதால் பல்சிதைவு ,பல் ஆட்டம் ஏற்படுகிறது .

மேலும் சாப்பிடும் பொது உணவு பொருட்கள் பற்களில் தங்கி பல்லில் ஓட்டை  விழுதல் ,பற்களில் இரத்தம் வருதல் ,ஈறுகளில் இரத்தம் வருதல் ,முதலிய நோய்கள் ஏற்படுகிறது.எனவே சாப்பிட்டவுடன் இளஞ்சூட்டில் நீரை கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க வேண்டும் .

மேலும் காலையில் எழுந்தவுடன் வாயை கொப்புளித்து விட்டு வெறும் கையால் பல் துலக்க வேண்டும்.மதியம் சாப்பிட்ட பின்பும் அரைமணிநேரம் கழித்து சிறிது நீரை சூடாக்கி அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வாய்க்கொப்புளித்தால்   பல்லில் இருக்கும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

தேவையான  பொருட்கள் :

தண்ணீர் -200மி லி

நீர்முள்ளிவிதை -20கி

வசம்பு துண்டு -10 கி

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நீர்முள்ளிவிதை ,வசம்பு ஆகியவற்றை  சேர்த்து நன்கு கொதிக்க வைத்து காலை ,மலை ஆகிய இரு வேலைகளிலும் பல்துலக்கிய பின்பு இந்த நீரை மிதமான சூட்டில் வாய்கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தபட்ட அனைத்து நோய்களும் குணமாகும் .

பயன்கள் :

நீர்முள்ளி இது வயல் ஓரங்களில் பார்ப்பதற்க்கு கண்களை பறிக்கும் வண்ணத்துடன்  பூக்களை கொண்டு  இருக்கும்.இது பல்லில் ஓட்டை  விழுதல் ,பற்களில் இரத்தம் வருதல் ,ஈறுகளில் இரத்தம் வருதல் ,முதலிய நோய்களை நீக்குகிறது.வசம்பு இது குழந்தைகளுக்கு ஏற்படும் வாயுத்தொல்லைகளை நீக்குகிறது.

 

 

Leave a Comment