குடிபோதையில் வாகனம் ஒட்டிய இளைஞர்களை அழைத்து, தவறை சுட்டிக்காட்டி…. கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய காவல்துறையினர்……!!!

கோவை மாவட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஒட்டிய இளைஞர்களை போலீசார் அழைத்து, அவர்களின் தவறை சுட்டிக்காட்டி அவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

குற்றங்கள் பெருக காரணம் :

பல குற்றங்கள் பெருகுவதற்கு இந்த மது தான் காரணம் என்று கூறியுள்ளார், நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு குற்றமும் நீங்கலாக செய்வதில்லை 90% குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் இந்த மது தான் என்று கூறியுள்ளார்.

Related image

இந்த  இளைஞர்களோடு  காவல் துறையினர் பேசுகையில், அரசாங்கம் தானே மது கடைகளை திறக்கிறது, பின்னர் குடித்தால் ஏன் பிடிக்கிறீர்கள் என்ற கேள்விகள் கூட உங்கள் மத்தியில் எழும்பலாம், அரசு மது கடைகளை திறந்தாலும், அந்த மது பாட்டிலும் மது உடலுக்கு கேடு என்று தானே எழுதி இருக்கிறது, கேடு என்று தெரிந்தும் அதை குடிப்பது தவறு என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நம்முடைய சிறிய சந்தோசம் கூட மற்றவர்களை கஷ்டப்படுத்துமாறு இருக்க கூடாது. வருங்கால இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகாமல், சாதனைகளை புரிகிறவர்களாக இருக்க வேண்டும் என்று கூறி கேக்குகளை கொடுத்து, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment