இன்று நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ரத்து..! என்ன காரணம்…?

இன்று நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு. 

தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த நிபந்தையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் காத்திருக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. காரணம் என்னவென்றால், உயர்நீதிமன்றம் விதித்த 11 நிபந்தனைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், வங்காளம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நாங்கள் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment