Today’s Live : விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரத்துடன் ஏக்கருக்கு ரூ.10,000 வழங்க வேண்டும்..! கே.சி.ஆர்

ஏக்கருக்கு ரூ.10,000 :

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரத்துடன் ஏக்கருக்கு ரூ.10,000 முதலீட்டுக்கு வழங்க வேண்டும். ஒரு விவசாயி துரதிர்ஷ்டவசமாக இறந்தால், அவருக்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க வேண்டும். தெலுங்கானாவை போல் இங்கும் மையங்களை திறந்து விவசாயிகளின் விளைபொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆர் கூறினார்.

26.03.2023 04.24 PM

கர்நாடகா இட ஒதுக்கீடு:

கர்நாடகாவில் இட ஒதுக்கீடு என்பது கேலிக்கூத்தாக உள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. இடஒதுக்கீட்டை சொத்தைப் போல் பிரித்துவிடலாம் என்று அவர்கள் (பாஜக) நினைக்கிறார்கள். இது சொத்து அல்ல, உரிமை. இந்த மண்ணின் சிறுபான்மையினருக்கு அவர்களின் சொந்த உரிமைகள் உள்ளன. அவர்களின் 4 சதவீதத்தை ரத்து செய்து எந்த முக்கிய சமூகத்திற்கும் வழங்குவதை நாங்கள் விரும்பவில்லை என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கூறினார்.

26.03.2023 01.24 PM

உத்தரகண்ட்டில் சத்தியாகிரகம் : 

டேராடூன், உத்தரகண்ட்டில் ராகுல் காந்தியை எம்.பி.யாக தகுதி நீக்கம் செய்ததைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியின் சங்கல்ப் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.


26.03.2023 12.10 PM

தமிழகம் முழுவதும் போராட்டம்

ராகுல்காந்திக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் காங்கிரஸ் இன்று சத்தியாகிரக போராட்டம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு அறப்போராட்டம் நடைபெறவுள்ளது.

26.03.2023 11.10 AM

காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம் : 

டெல்லி ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டத்திற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி டெல்லி போலீசார் அனும்மாதி மறுத்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடக்கவிருந்த ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

26.03.2023 10.20 AM

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment