இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…அதிர்ச்சியில் மக்கள்.!

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அருணாச்சல பிரதேஷ் மாநிலத்தின் சங்லாங் பகுதியில் ரிக்டர் அளவில் 3.5ஆகவும், ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேரில் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆகவும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டத்தை அறிந்த மக்கள் தங்களுடைய  வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும், இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக உள்ளதால், தற்போது உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை எனவும்  நிலநடுக்கவியல் தேசிய மையம் தகவலை தெரிவித்துள்ளது.

மேலும் இதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில்  6.6 ரிக்டர் அளவில் சக்த்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வடஇந்திய மாநிலங்களான டெல்லி-என்சிஆர், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டது.

Leave a Comment