வரலாற்றில் இன்றுதான் முதன் முதலாக மனிதன் விண்வெளியில் நடமாடினார்…!!

இன்று மார்ச் 18ம் தேதி 1965ம் ஆண்டு இதே நாளில் சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வாஸ்கோத் – 2 என்ற விண்கலத்தின் வெளியே சுமார் 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெயரை பெற்றார். இவர் தற்போது பணி ஓய்வில் இருக்கிறார். இவரது சாதனையை பாராட்டி சோவியத் ஒன்றிய அஞ்சல் தலையில் இவர் விண்வெளியில் நடந்த உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இரண்டு தடவை சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என்ற விருதையும், லெனின் விருதையும் பெற்றுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment