இன்று 4-வது டெஸ்ட்.. இந்தியா ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதான வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் போட்டியை நடத்தும் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்புடன் உள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த இரண்டு டெஸ்டில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றது. மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வெற்றி கைப்பற்றி இந்த டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

READ MORE- #INDvsENG : அடடே 2 மாற்றங்களா ..? 4-வது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்தது இங்கிலாந்து ..!

ராஞ்சியின் ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானம் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு ஒரு டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, மற்றொன்று டிராவில் முடிந்தது. 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்த மைதானத்தில் விளையாடியது. இந்த டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

பின்னர் இந்தியா 2019 இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் விளையாடியது. அதில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஞ்சியின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு உகந்ததாக கருதப்படுகிறது.இங்கு நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய விரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து:

இரு அணிகளும் இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இங்கிலாந்து 51 முறையும்,  இந்தியா 33 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 50 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது.  ஒட்டுமொத்தமாக இது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 135வது டெஸ்ட் போட்டியாகும்.

இந்திய அணி  தன் சொந்த மண்ணில் 24 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி தன் சொந்த மண்ணில் 36 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் இந்தியா 9 முறை மற்ற நாடுகளிலும், இங்கிலாந்த அணி மற்ற நாடுகளில் 15 முறை வெற்றி பெற்றுள்ளது.

author avatar
murugan

Leave a Comment