இன்று தொடங்குகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்.! முக்கிய அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு.!

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் தொடங்குகிறது. இதில் பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இன்றைய கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் பற்றிய அறிவிப்பு ஏதேனும் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்த போனஸ் முறையை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்பட அமைச்சரவைக் கூட்டத்தில் வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முக்கிய முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment