திருவண்ணாமலையில் இன்று மஹா தீபம் ஏற்றம்..!

திருவண்ணாமலை திருவிழாவில் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ஆம் தேதி   கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், விழாவின் கடைசி நாளான இன்று, இந்த நிலையில் இன்று பஞ்சபூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில் இன்று அதிகாலை 4 மணிக்கு கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment